ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுங்கள்...!! அதிருப்பதியடைந்த மோடி, அதிரடி உத்தரவு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 11:25 AM IST
Highlights

இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும்  மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும்  கவலை தெரிவித்திருந்தார் . 

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக  பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது .  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் இவ்உத்தரவை கடுமையாக்கியுள்ளத. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.   கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

 

 உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவரையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது . கொரனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 நெருங்கியுள்ளது இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது  இந்நிலையில் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது .  இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும்  மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும்  கவலை தெரிவித்திருந்தார் . 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில்  இந்தியாவில்  வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது எனவே ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
 . எனவே இன்று முதல் மாநில அரசுகள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  ஏற்கனவே அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள்,   திரையரங்குகள் ,  வணிக வளாகங்கள் ,  பொது போக்குவரத்து போன்றவற்றை முற்றிலுமாக மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.   இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து கடுமையான ஊரடங்காக  144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .  எனவே மக்கள் ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்க தயாராகி வருகின்றனர்.  
 

click me!