இந்த 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் வைக்க மத்திய அரசு அனுமதி.. என்னென்ன தெரியுமா?

By vinoth kumar  |  First Published Apr 29, 2023, 8:10 AM IST

 நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது. 

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு தமிழக அரசு விண்ணப்பித்தது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. அதன்படி சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க  15 நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதில், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்  உள்ளிட்ட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!