
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.