2 ஜி வழக்கு தீர்ப்பு …டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வரிந்து கட்டும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு !!

 
Published : Dec 22, 2017, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
2 ஜி வழக்கு தீர்ப்பு …டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வரிந்து கட்டும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு !!

சுருக்கம்

cbi and enforcement wing apeal delhi high court against 2g verdict

2 ஜி வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதின்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ அறிவித்துள்ளது.                                                                    

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள், தனிக்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என தெரிவித்தார்.

2ஜி வழக்கு தீர்ப்பின் அடிப்படை அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன என்றும் . விசாரணையின்போது, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக அளித்த ஆதாரங்கள், கோர்ட்டால் அதன் சரியான முன்னோக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தேவைப்படுகிற சட்ட ரீதியிலான தீர்வுகளை சி.பி.ஐ. எடுக்கும்” எனவும்  அபிஷேக் தயாள் கூறினார்..

பொதுவாக எந்தவொரு வழக்கிலும், கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறபோது, அதை மாதக்கணக்கில் ஆராய்ந்துதான் அப்பீல் செய்வது குறித்து சி.பி.ஐ. முடிவு எடுக்கும்.

ஆனால் 2 ஜி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட சில மணி நேரத்திலேயே அப்பீல் செய்யப்போவதாக சி.பி.ஐ. அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதே போன்று  கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக சிபிஐ . தனிக்கோர்ட்டில்  அமலாக்கப்பிரிவு சார்பில் தொடரப்பட்ட

வழக்கிலும் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று கருதி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அனைவரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!