
தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தலைமைறைவாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக போராசிரியர் முருகனை , இன்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட வந்தபோது சிபிசிஐடி போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி அக்கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம்சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினர்.சனிக்கிழமை நிர்மலாதேவியின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர் அங்கு சில முக்கிய கணினி உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர்.
பின்பு,அவரது வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் கலைச்செல்வன் என்ற பேராசிரியரிடம் நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் 14 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவர் சொன்னபடி தான் தான் நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அவர்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் முருகன் மற்றும் பி.எச்டி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாம் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகியிட்டனர்.
அதில் கருப்பசாமி என்பவரது வீடு, விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியை அடுத்த நாடாகுளத்தில் உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு சென்ற சிபிசிஐடிகாவல்துறையினர் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் பேராசிரியர் முருகன் மறைந்து மறைந்து கையெழுத்திட வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிசிஐடி போலீசார் அவரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.