
காவிரி நதிநீர் பிரச்சனையில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இன்று முழுவதுமாக பேருந்து போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்வை வெளியிடுகின்றது. இதற்கு முன்பு காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொரு முறை தீா்ப்பு வெளியாகும் போதும் கர்நாடகாவில் பெரும் கலவரம் ஏற்படும், தமிழகர்களின் வாகனங்கள்,சொத்துகள் போன்றவை தீ வைத்து கொளுத்தப்படும். பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
தமிழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்துகள், தமிழக பதிவெண் கொண்ட தனியார் வாகனங்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. தீா்ப்பு சமயங்களில் கா்நாடகாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்நிலையில் நதிநீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்பை வழங்குகிறது. . இதனால் கா்நாடகாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கா்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் இரு மாநில எல்லையான ஓசூா் பகுதியில் நேற்று நள்ளிரவு முதலே நிறுத்தப்பட்டன.
இதே போன்று நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்சனை ஓயும் வரை பேருந்துகள் இணக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.
மேலும் வேலூா் வழியாக கா்நாடகா செல்லும் பேருந்துகளும் வேலூாரிலேயே நிறுத்தப்படட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பதற்றம் நிறைந்த பகுதிகள் என கருதப்படும் மைசூர் மற்றும மாண்டியா மாவட்டங்களிலும் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.