காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் - ராகுலுக்கு ’நறுக்’ கேள்வி கேட்ட தமிழிசை

 
Published : Mar 19, 2018, 07:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் - ராகுலுக்கு ’நறுக்’ கேள்வி கேட்ட தமிழிசை

சுருக்கம்

Cauvery management board issue tamilisai ask question to rahul ganthi

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அமைக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை தொடர்ந்து 11-வது நாளாக முடங்கப்பட்டு வருகிறது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜ.க. கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி அதிரடியாக வெளியேறியது. 

இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இதனிடையே அதிமுக எம்.பி.க்களை நேரில் சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டதாகவும் அவர்கள் ஆதரவு தர மறுத்து விட்டதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் தெரிவித்திருந்தார். 

இதைதொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் செயல் அதிமுகவின் இந்த செயல் மத்திய அரசிற்கு ஆதரவாக உள்ளதாக குற்றசாட்டியுள்ளார். 

இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி