சசிகலா புஷ்பா விவாகரத்து உண்மைதான்... வெளியானது சான்றிதழ்!

Asianet News Tamil  
Published : Mar 19, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
சசிகலா புஷ்பா விவாகரத்து உண்மைதான்... வெளியானது சான்றிதழ்!

சுருக்கம்

released sasikala pushpa divorced certificate

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் தாங்கி, வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது ஓர் அழைப்பிதழை அடுத்து சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன சான்றிதழ் வெளியாகியிருக்கிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லி  நார்த் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்  அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இல்லாமல்,  ஆதரித்து பேசாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில்  வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.



இதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இதை  மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும்  விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர்.  கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து  வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் திருமண அழைப்பிதழ் பற்றி இன்னும் யாரும் உறுதியாக சொல்லவில்லை, அந்த அழைப்பிதழில் இருக்கும் அலைபேசி என்னை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை இன்னும் அடங்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு ஜாக்பாட்... இபிஎஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி..!
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?