MP, MLA -க்களுக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவு.

Published : Jun 17, 2021, 05:33 PM IST
MP, MLA -க்களுக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவு.

சுருக்கம்

எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான எம்பிக்கள், எம் எல் ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 

எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான எம்பிக்கள், எம் எல் ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நீதிமன்றங்களுடைய செயல்பாடுகள் குறித்து அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது, விரைந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது உயர் நீதிமன்ற பதிவுத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்பட்டு விட்டதாகவும்,  சிறப்பு நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பிற உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இனி மேலும் தொடர வேண்டிய அவசியமில்லை எனக் கூறி முடித்து வைத்தனர். அதேபோல் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான  வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி தாமதமின்றி முடிக்கவேண்டும் என்ற சிறப்பு நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. 
 

PREV
click me!

Recommended Stories

திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!
வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?