#BREAKING கனிமொழி, தயாநிதி மாறன் மீதான வழக்குகள் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 12:56 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதிமுக ஆட்சி செய்து வருகிறது. 'கரப்ஷன் கிங்' என்று முதல்வர் பழனிசாமிக்கு பட்டம் வழங்கலாம்” என்று திண்டிவனத்தில் பேசிய கனிமொழி விமர்சித்திருந்தார். 

திமுக எம்.பி.களான கனிமொழி, தயாநிதி மாறன், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் 2018ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது  சேலத்தில் ஸ்டாலின், கந்தன் சாவடியில் துரைமுருகன், திண்டிவனத்தில் கனிமொழி, சென்னையில் தயாநிதி மாறன், திருச்சியில் கே.என்.நேரு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க;- திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

அப்போது, அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதிமுக ஆட்சி செய்து வருகிறது. 'கரப்ஷன் கிங்' என்று முதல்வர் பழனிசாமிக்கு பட்டம் வழங்கலாம்” என்று திண்டிவனத்தில் பேசிய கனிமொழி விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதையும் படிங்க;- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.!

அதேபோல்,  2020ம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக எம்.பி. தயாநிதி மாறன் அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். இதனால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன் மீதும் அவதூறு வழக்கு தொடரபட்டது.

இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்ப பெறுவதாக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்து, அரசாணையை சமர்ப்பிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மூவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தனர். 

click me!