தமிழிசை சவுந்தரராஜன் மீதான வழக்கு ரத்து... திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு..!

Published : Sep 28, 2021, 06:38 PM IST
தமிழிசை சவுந்தரராஜன் மீதான வழக்கு ரத்து... திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு..!

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரபட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  

விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரபட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க மாநில தலைவராக தமிழிசை இருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனை விமர்ச்சித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாடி கார்த்திகேயன் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் ஆஜராக சம்மன் அனுபப்பட்டது. சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் பலமுறை விசாரணைக்கு வந்தபோதும், தமிழிசை சவுந்தரராஜன் தரப்பும், தாடி கார்த்திகேயன் தரப்பும் ஆஜராகவில்லை. அதன்பின்னர் இந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள நீதிபதி, அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும், அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளது.

 

இந்த வழக்கு அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக புரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ, அதன் தலைவர் தொல். திருமாவளவனிடம் இருந்தோ எந்த அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது' எனக் கூறி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!