ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்கு… 6 மனுக்களையும் தள்ளுபடி செய்தது உயர்நிதிமன்றம்…

First Published Aug 8, 2018, 8:49 AM IST
Highlights

எம்ஜிஆர் சமாதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட் 6 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையில், இதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், எனவே கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும் தமிழக அரசு அறிவித்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் துரைசாமி4 வழக்குகளும், பாமுக பாலு ஒரு வழக்கும், டிராபிக் ராமசாமி ஒரு வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை காரணம் காட்டி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கக்  கூடாது என தெரிவித்த துரைசாமி, பாலு ஆகியோர் தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றனர்,

ஆனால் டிராபிக் ராமசாமி மட்டும் இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் தனது வழக்கை தொடர வேண்டம் என தெரிவித்திருந்தார், ஆனால் பின்னர் அவரும் தனது வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குள் அனைத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தற்போது தமிழக அரசைத் தவிர வேறு எந்த எதிர்ப்பு  இல்லாததால் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!