கலை, இலக்கியத்தில் கருணாநிதியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை… நடிகர் சிவகுமார், சூர்யா கண்ணீர் அஞ்சலி!!!

Published : Aug 08, 2018, 08:30 AM IST
கலை, இலக்கியத்தில் கருணாநிதியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை… நடிகர் சிவகுமார், சூர்யா கண்ணீர் அஞ்சலி!!!

சுருக்கம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதிதான்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், விஐபிக்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ராதா ரவி, மன்சூர் அலிகான், நடிகர் பிரபு குடும்பத்தினர், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவகுமார் தனது மகன் நடிகர்  சூர்யாவுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்திளாளர்களிடம் பேசிய சிவகுமார், தந்தை பெரியாரின் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதிதான்  என்றும், கலை இலக்கியத்தில் கலைஞலை அடித்துக் கொள்ள இரு வரை உலகில் யாரும் பிறக்கவில்லை என புகழாரம் சூட்டினார்.

இதனைத்  தொடர்ந்து நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!