மெரீனாவில் இடமில்லை… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் !!

First Published Aug 8, 2018, 8:34 AM IST
Highlights

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடமில்லை.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும்,  திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில்  அடக்கம் செய்ய வேண்டுன் என திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக திமுக தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திமுகவின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி,  கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என  தெரிவித்தார்.

 

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்து.

 

இதையடுத்து திமுக சார்பில் இது குறித்து நீதிமன்றத்துக்கு சென்றனர். திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 

 

இதையடுத்து  திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்த  வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்கரையில் உடலைப் புதைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இன்றும் சற்று நேரத்தில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்படுகிறது.

click me!