Captain Vijayakanth Passed Away : விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்சி நிகழ்வில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறது. அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 18ம் தேதி நுரையீரலில் சளி சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டு விஜயகாந்த் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரை பார்த்த தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்விட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக தலைமை விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து மியாட் மருத்துவமனை மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை அறிந்த தொண்டர்கள் அவரது வீட்டிற்கு முன்பு குவிந்து கண்ணீர் கதறி அழுது வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.