முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 1:13 PM IST
Highlights

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சி.வி.சண்முகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக தலைமை நிலைய செயலாளராக இருந்த கருணாநிதி போட்டியிட்டார். இந்த தேர்தலில் சண்முகம் மற்றும் பாமக வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. 

கொலை முயற்சி ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சி.வி.சண்முகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக தலைமை நிலைய செயலாளராக இருந்த கருணாநிதி போட்டியிட்டார். இந்த தேர்தலில் சண்முகம் மற்றும் பாமக வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. 

பிரச்சாரத்தின் போது ஒருவருக்கு ஒருவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேச பேசினர். ஆனால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். அப்போது, வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு தனது ஆதரவாளர்களுடன்  தனது வீட்டு முன்பாக அவர் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தை கொலை செய்த முயற்சித்தனர். அப்போது, காருக்கு அடியில் புகுந்து கொலையாளிகளின் கண்களில் படாமல் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவரை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இதனையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரை கண்டதுமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பாமக வேட்பாளராக இருந்த கருணாநிதி உள்ளிட்ட சுமார் 26 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2012ம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில்தான் சி.வி. சண்முகம் வீட்டிற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 4 போலீசார் சி.வி.சண்முகம் எங்கே சென்றாலும் அவர் கூடவே செல்லும் வகையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி முதல் முன்னாள் அமைச்சர். சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

click me!