முதல்வர் ஸ்டாலினால் செய்யமுடிகிறது ஏன் மோடியால் முடியாதா.? கே.எஸ் அழகிரி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2021, 11:25 AM IST
Highlights

அவர்களை  பாராட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு, சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சைக்கிள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குறைக்க முடியும் என்றால் மத்திய அரசால் ஏன் குறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கடந்த மாதம் 11 நாட்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மீ தூரம், மனித உரிமைத் தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் 56 பேருடன் நடைபெற்ற மாபெரும் கண்டண சைக்கிள் பேரணி சென்றனர். 

அவர்களை  பாராட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு, சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சைக்கிள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி. உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என கூறினார். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவதற்கும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசை போல மத்திய அரசும் கலால் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறையும். ஆனால் வரியை குறைக்காமல் காங்கிரஸ் மீது மத்திய அரசு பழி சுமத்துகிறது. பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குறைக்க முடியும் என்றால் மத்திய அரசால் ஏன் குறைக்க முடியாது என கேள்வி எழுப்பிய அவர், உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கான இடங்களை கேட்டுப்பெறுவோம். உள்ளாட்சி தேர்தலில் கிராம அளவில் போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 

click me!