ஒரு மக்கள் பிரதிநிதியே ரவுடி மாதிரி நடக்கலாமா? திமுக மானத்தை வாங்கும் அன்புமணி..!

By vinoth kumarFirst Published Jan 28, 2022, 12:23 PM IST
Highlights

சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கு மாநகராட்சி சாலை இணைப்பு உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, நடராஜன் கார்டன் முதல் தெரு, 2வது மற்றும் 3வது தெருவில் சாலைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. அப்பொழுது, எம்.எல்.ஏ., தனது ஆட்களுடன் அந்த இடத்திற்கு வந்து சாலை போடும் பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உதவி பொறியாளர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தபோது, அவரை எம்.எல்.ஏ தாக்கியதாயுள்ளார். இந்த சம்பவத்திற்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும்,  சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும்  ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!(3/3)

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று  திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!