27 ஆம் தேதி முதல்வர் கன்னியாகுமரியில் சூறாவளி பிரச்சாரம்.. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2021, 5:13 PM IST
Highlights

வரும் 27ஆம் தியதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.  நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரசாரத்தை அடுத்து நெல்லையில் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட உள்ளார்.
 

குமரி மாவட்டத்தில் வரும் 27ஆம் தியதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், கன்னியாகுமரியில் அமைய இருந்த சரக்கு பெட்டக முனையம் மாநில அரசின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யபட்டதாகவும் நாகர்கோவிலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்தும்  6சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், வரும் 27ஆம் தியதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரசாரத்தை அடுத்து நெல்லையில் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட உள்ளார். 

அதை தொடர்ந்து நாகர்கோவில் தனியார் விடுதியில் முதல்வர் தங்கவுள்ளதாகவும், மேலும் கன்னியாகுமரியில் மக்கள் எதிர்பையும் மீறி சரக்கு பொட்டக முனையும் அமைக்கும்  முயற்சியை தமிழக அரசின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகவும், இதை வைத்து தேர்தல் அரசியலில் ஈடுபடும் எதிர்கட்சிகள்   முயற்சி  ஒருபோதும் பலிக்காது எனவும்,  தமிழக அரசின் சாதனைகளை சொல்லியே தாங்கள் வாக்கு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 

click me!