மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி... தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2021, 4:30 PM IST
Highlights

 மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கள்ள மார்க்கெட்டில் ஒரு குவாட்டர் 30 முதல் 500 ரூபாய்க்கு விற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தல் - ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளான அன்றும் டாஸ்மார்க் கடை விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே மாதம் 2-ஆம் தேதியும் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கள்ள மார்க்கெட்டில் ஒரு குவாட்டர் 30 முதல் 500 ரூபாய்க்கு விற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

click me!