முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2021, 10:48 AM IST
Highlights

அதேப்போல வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைப்பெற உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைப்பெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். 

நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில 2021-22ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை 13ம் தேதி தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதேப்போல வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைப்பெற உள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும். 

மேலும், புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி, நிதிநிலை அறிக்கைக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!