பாலியல் பலாத்காரம் செய்து தலித் சிறுமி எரித்துக் கொலை... கோவில் பூசாரி செய்த அட்டூழியம்..!

Published : Aug 04, 2021, 10:38 AM IST
பாலியல் பலாத்காரம் செய்து தலித் சிறுமி எரித்துக் கொலை... கோவில் பூசாரி செய்த அட்டூழியம்..!

சுருக்கம்

அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி சிறுமி ஒருவரை மயானத்தில் வைத்து எரித்துக் கொண்டிருப்பதாக, தகவல் கிடைத்தது. 

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

டெல்லி அருகே, நங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம், அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகளைக் காணவில்லை என சிறுமியின் பொற்றோர் தேடி அழைந்துள்ளனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி சிறுமி ஒருவரை மயானத்தில் வைத்து எரித்துக் கொண்டிருப்பதாக, தகவல் கிடைத்தது. அந்த சிறுமியின் உறவினர்கள்  அங்கு சென்ற பார்த்தபோது, கோவில் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் உடலை ஏரித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சிறுமியின் உறவினர் பூசாரியை தாக்கியுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து விசாரித்தபோது, சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், இறந்து விட்டதாக கூறி, தாயின் சம்மதம் பெறாமலேயே சிறுமியின் உடலை எரித்தாக கூறியுள்ளனர்.

பின்னர் எரிந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பூசாரி ராதே சியாம் உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!