முக்கிய பிரமுகர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

Published : Aug 04, 2021, 10:20 AM IST
முக்கிய பிரமுகர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

சுருக்கம்

கட்சிக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் எஸ்.கௌதம் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக  ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

கட்சிக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் எஸ்.கௌதம் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக  ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணபை்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  E.கௌதம் (குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு