குடியுரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் இருந்து ஒரு அங்குலம் கூடபின் வாங்க மாட்டோம் !! அதிரடி அமித் ஷா !!

By Selvanayagam PFirst Published Jan 3, 2020, 7:59 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா அதிரடியாக தெரிவித்துள்ளார்.கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மற்றும் வட இந்தியாவில் இச்சட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும், குடியுரிமை சட்டத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம்.  வாக்கு வங்கி அரசியலைப் பொறுத்தவரை, வீர் சாவர்க்கர் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இதற்காக காங்கிரஸ்காரர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்.

ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட் ஜி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிராக போராடுவதை விட்டு கோடாவின் தினமும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மீது முதலில் கவனம் செலுத்துங்கள்.  கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தாய்மார்கள் உங்களைச் சபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்..

click me!