148 ஒன்றியங்களை கைப்பற்றிய திமுக... அதிமுக - அமமுக கைப்பற்றியது எத்தனை ஒன்றியங்கள் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2020, 6:19 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடைபெற்ற 315 ஒன்றியங்களில் 148 ஒன்றியங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட நிறைவடைந்து அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல்  நீடித்து வருகிறது.

 

உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடைபெற்ற 315 ஒன்றியங்களில் 148 ஒன்றியங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 136 ஒன்றியங்களை கைப்பற்றியது. மொத்தம் 25 ஒன்றியங்கள் யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது. இரண்டு ஒன்றியங்களை அமமுக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.  ராமதாபுரம்ன் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்நிலையில்  13 மாவட்டங்களை திமுகவும், 13 மாவட்டங்களை அதிமுகவும் கைப்பற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர்,  ராமநாதபுரம், திருச்சி 13 மாவட்ட கவுன்சில்களை திமுக கைப்பற்றுகிறது.

 

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர்,  விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கைப்பற்றுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக- திமுக கூட்டணி தலா 8 இடங்களை கைப்பற்றியுள்ளதால் சமமாக உள்ளது.

click me!