திமுக-காங்கிரஸிற்கு சாபமிட்ட பொன்னார்..! பொங்கியெழுந்த அழகிரி..!

By Manikandan S R SFirst Published Jan 3, 2020, 6:01 PM IST
Highlights

450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று எல்.கே. அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தி, நாடு முழுவதும் மதக் கலவரத்தை தூண்டியது யார் ? இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு ? இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்பதாக கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவில்லை எனவும் மக்கள் தான் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது இயல்பிற்கு மாறாக, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மீது சாபமிட்டு பேசியிருக்கிறார். 

தி.மு.க.வும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தும், பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தும் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தை மதரீதியாக தூண்டி விட்டு பிணம் தின்னும் அரசியல் நடத்தியது யார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று எல்.கே. அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தி, நாடு முழுவதும் மதக் கலவரத்தை தூண்டியது யார் ? இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு ? இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை.

2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க., முத்தலாக் சட்டத்தையோ, குடியுரிமை சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? இஸ்லாமியர்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதை இன்றைக்கு இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு முறியடித்து வருகிறார்கள். இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க., காங்கிரஸ் மீது சாபமிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

click me!