சிஏஏ சட்டத்தை ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது.! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் .

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2020, 7:54 AM IST
Highlights

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று, ரயில்வே துறை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

 

T.Balamurukan

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று, ரயில்வே துறை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற, சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து பேசியவர்., ' கூட்டாட்சி அமைப்பில், தேசியச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சிஏஏ சட்டத்தை மலிவான அரசியலாக்க வேண்டாம். ஒரு சில மத்ததினரை மட்டும் திருப்திப்படுத்துவதன் அடிப்படையில் அரசியலாக்க வேண்டாம்.எந்த அடிப்படையும் இல்லாமல், தெலங்கானா சட்டப் பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற அந்த மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது.சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் முடிவை தெலங்கானா அரசு திரும்பப்பெற வேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

click me!