ஜமியா பல்கலைக்கழகம் மாணவர் டெல்லி போலீசாரிடம் 1கோடி கேட்டு வழக்கு.!! வைரல் வீடியோவே சாட்சி.!!

Published : Feb 19, 2020, 12:07 AM IST
ஜமியா பல்கலைக்கழகம் மாணவர் டெல்லி போலீசாரிடம் 1கோடி கேட்டு வழக்கு.!! வைரல் வீடியோவே சாட்சி.!!

சுருக்கம்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜமியா பல்கலைகழகத்திற்குள் போலீஸ் புகுந்து மாணவர்களை புரட்டி எடுக்கும் சம்பவம் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர், காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 T.Balamurukan

டெல்லி, ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வன்முறையில் முடிவடைய, காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் போராட்த்தின்போது வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விடியோ ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில், காவல் துறை உடையணிந்திருந்தவர்கள் நூலகத்தில் இருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த விடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது நினைவிருக்கலாம்.

டெல்லி, காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் முகமது முஸ்தபா என்ற மாணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து  அந்த மாணவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது..,

"நான் அரசிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நபர் நூலகத்திலேயே பாதுகாப்பாக இல்லை என்றால், வேறு எங்கு அவரோ அல்லது அவளோ பாதுகாப்பாக இருப்பார்கள்? நான் செய்த குற்றம் என்ன என்று டெல்லி காவல் துறையை கேட்க விரும்புகிறேன். டெல்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்.அன்றைய தினம் நான் காலை முதல் நூலகத்தில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். சுமார் மாலை 6 மணியளவில், எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் வளாகத்திற்குள் புகுந்த போலீசார் அனைவரது மீதும் தடியடி நடத்தினர். எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காதபோதிலும் நான் தாக்கப்பட்டேன்" என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி