நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பாங்க !! எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்லுது தெரியுமா ?

Published : Oct 22, 2019, 09:30 AM IST
நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பாங்க !! எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்லுது தெரியுமா ?

சுருக்கம்

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தனியார் அமைப்பு மற்றும் உளவுத் துறை மூலம் எடுக்கப்பட்ட எக்ஸிட் போலில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.  

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரண்டு தொகுதிகளிலும் நேற்று இடைத் தேத்ல் நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாட்டின் படி தனியார் அமைப்பு ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஈடுபட்டது. அந்த கணிப்புப்படி விக்கிரவாண்டியில் அதிமுக கூட்டணி 15,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. 

அதேபோல நாங்குநேரியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அதே போல் உளவுத் துறை எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் முடிவுகள் அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்
CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!