ஆந்திராவில் பஸ் இருக்கைகள் சூப்பராக மாற்றம்.!! கொரானாவை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்த போ.வ.துறை.!!

By T BalamurukanFirst Published May 11, 2020, 11:06 PM IST
Highlights

போக்குவரத்து கழக பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொது முடக்கம் மே17ம் தேதிக்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட இருக்கிறது. இதனால் மாநிலப் போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை சமூக இடைவெளியுடன் இயக்கத் தயாராகி வருகிறது. ஆந்திர அரசு முன்கூட்டியே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது.

 ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள இருக்கைகளும் அதற்கேற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.நீண்டதூர விரைவுப் பேருந்துகள் முதல், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வரை இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு பக்கம் 3 வரிசை, மற்றொரு பக்கம் 2 வரிசை என இருந்த இருக்கைகள் முன்புறம், பின்புறம், இடையில் என 1 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. 

 பேருந்துகள் முறையாக கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளும் முகத்திற்கு கவசம் அணிதல், கையில் கையுறை அணிதல், தங்களுக்கு தேவையான போர்வைகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தாங்களே கொண்டு வருதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் விரைவு பேருந்துகளின் முன்பதிவும் தொடங்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திராவை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் இதே முறையை பின்பற்ற தயாராகி வருகின்றது.

click me!