
பாராளுமன்றத்தில் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துவருகிறார்.
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான அறிவிப்புகள்:
சமூக பாதுகாப்புத் திட்டங்களை மத்திய பாஜக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு சிறந்த தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும். ஆனால் தரமான கல்வி என்பது இன்னும் கவலைப்படும் வகையிலேயே உள்ளது.
* ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
* அனைத்து வகையிலும் டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில், பள்ளிகளிலும் கரும்பலகைக்கு பதிலாக படிப்படியாக டிஜிட்டல் பலகைகள் அறிமுகப்படுத்தப்படும்.
* ஐஐடி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்களில் 18 புதிய கட்டிடக்கலை பிரிவுகள் தொடங்கப்படும்.
* நாடுமுழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் புதிதாக 24 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.
* இலவச மருத்துவ வசதி திட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பம் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வசதிகளை பெறலாம். இதன்மூலம் 50 கோடி பேர் பயன்பெறுவர்.
* ஜீவன் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் 5.22 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.