
மத்திய பட்ஜெட் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.
கூட்டம் தொடங்கியதும் உயிரிழந்த எம்பிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ரொக்க பரிவர்த்தனை குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் 5வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிது முடக்கத்தை சந்தித்திருந்த உற்பத்தித்துறை மீண்டும் பழைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் இரண்டாவது பாதியில் இந்தியாவின் வளர்ச்சி 7.5% ஆக இருக்கும். உற்பத்தித்துறை மீண்டும் சிறந்த நிலையை அடைந்துள்ளதால், இந்த ஆண்டில் 15% ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் நலத்திட்டங்களும் மானியங்களும் சரியான மக்களுக்கு சென்றடைகிறது. சிறந்த நிர்வாகத்தை வழங்குவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். மானியங்கள் மக்களுக்கு சென்றடைவதில், இடைநிலைகளை களைந்து நேரடியாக மக்களிடம் அரசு நேரடியாக கொண்டு சேர்த்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.