சட்டத்துல இப்படி ஒன்று இருக்கு.. தைரியமாக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கலாம்.. கொந்தளிக்கும் கே.எஸ்.அழகிரி.!

By vinoth kumarFirst Published Nov 14, 2021, 6:46 PM IST
Highlights

குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் கூடாது அது அருவருப்பான விஷயம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு, எது சரி எது தவறு என்பது குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் கடந்த 5ம் தேதி எல்.இ.டி. திரை மூலம் மோடியின் பேச்சு ஒளிபரப்பானது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வை ரங்கராஜ் நரசிம்மன் என்ற தீவிர வைஷ்ணவர் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார். மோடியின் பேச்சை கோவிலில் ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;- என்னாது...! ஸ்ரீரங்கம் கோவில் LA மோடியோட பேச்சா...??? கொந்தளித்து கொப்பளித்த கடவுள் மறுப்பு வீரமணி..!

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி;- தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, எதிர்பார்த்ததை விட 5 மடங்கு மழை பெய்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசுக்கு நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க;- justiceforpontharani எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆற்றிய வீடியோ உரையை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பக்தர் ஒருவர் செய்தியாக வெளியிட்டிருப்பதாக கூறினார். 1988ஆம் ஆண்டு சட்டத்தின்படி அரசியல் சார்ந்த பரப்புரைகளை வழிபாட்டு தலங்களில் வெளியிடக்கூடாது என்றும் அத்துமீறி வெளியிடுபவர்கள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் இருப்பதால் அண்ணாமலை மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேலும், குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் கூடாது அது அருவருப்பான விஷயம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு, எது சரி எது தவறு என்பது குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!