CAA சட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வாங்க! இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு! காடேஸ்வரா கோரிக்கை.!

Published : Jan 27, 2023, 06:49 AM ISTUpdated : Jan 27, 2023, 06:54 AM IST
CAA சட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வாங்க! இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு! காடேஸ்வரா கோரிக்கை.!

சுருக்கம்

 கோவை விமான நிலையத்தில் அன்வர் உசேன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கின்ற பொழுது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். பிடிபட்ட ஆசாமி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே திருப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டவரை தடுக்க உடனே சிஏஏ அமல்படுத்த வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்றும், பல வகைகளில் ஊடுருவல் நடந்து வருகிறது என்றும் தொடரந்து இந்து முன்னணி பலமுறை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்றும் கூறிவந்தது. 

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அன்வர் உசேன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கின்ற பொழுது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். பிடிபட்ட ஆசாமி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே திருப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் பெங்களூர் சென்று மேற்கு வங்க முகவரியில் ஆதார், கடவுச்சீட்டு முதலியவைகளைப் பெற்றுள்ளார். பிறகு அரபு எமிரேட்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். 

அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு வருவதற்காக போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வருகின்ற பொழுது காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள் நமது பாரத நாட்டின் தேசிய கீதம் பாட சொல்லி இருக்கின்றார்கள் அவரால் பாட முடியாத காரணத்தினால் இவர் பங்களாதஷைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடித்து கைது செய்துள்ளார்கள். கண்டுபிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள் அதே போல் உ.பி யில் பாகிஸ்தான் பெண் திருமணம் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகி திருமணம் என்ற பெயரில் ஊடுருவி உள்ளார். 

இப்படி போலி சான்றுகள் ஒரு வெளிநாட்டு ஊடுருவல்காரர் பெற முடியும் என்பது எத்தகைய அபாயகரமானது என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியரசு உள்ளது இந்த செய்தியின் வாயிலாக நிரூபணம் ஆகி உள்ளது. எனவே மத்திய அரசு CAA சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். மாநில அரசு தமிழகத்தில் தங்கியுள்ள பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்திற்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று இந்துமுன்னணி எச்சரிக்கை விடுக்கிறது என  காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!