மூச்சுவிடுவதில் சிரமம்... 3வது நாளாக தொடரும் சிகிச்சை - விஜயகாந்த் ஹெல்த் அப்டேட்

By Ganesh A  |  First Published Nov 20, 2023, 10:02 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதால் மூன்றாவது நாளாக அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். ரசிகர்கள் அவரை கருப்பு எம்ஜிஆர் என அழைக்கும் அளவுக்கு மக்கள் நலப்பணிகளிலும் சிறந்து விளங்கினார் விஜயகாந்த். இவர் சினிமாவில் இருந்து விலகி தேமுதிக என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் அதிரடியாக வளர்ச்சி கண்டார். போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் இடம்பிடித்து மற்ற கட்சிகளுக்கு செம்ம டஃப் கொடுத்தார்.

2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது அரசியல் கட்சியும் பின்னடைவை சந்தித்தது. கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் விஜயகாந்த், அவ்வப்போது உடற்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Latest Videos

undefined

அங்கு விஜயகாந்துக்கு 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை  சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறதாம். விரைவில் அவர் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்களும், தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...   ரஜினிகாந்துக்கே பிடித்த சிங்கப்பூர் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா? அவரே சொன்ன உண்மை - Throw Back இன்சிடென்ட்!

click me!