Breaking news:அடி தூள்.. காவல் துறைக்கு வாரிவழங்கிய பிடிஆர்.. 8, 930கோடி நிதி ஒதுக்கி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 10:43 AM IST
Highlights

பொது நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும், கீழடி ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆய்வுப்பணிகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழக காவல்துறையை மேம்படுத்த 8, 930 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்த பிடிஆர், காவல்துறையில் உள்ள 1, 33,198 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 14,317 பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு இருந்து வருகிறது. 

ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.அதே நேரத்தில் கடுமையாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை பிடிஆர் தாக்கல் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிவோம். 

இந்நிலையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. சரியாக காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய அவர், பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம் சூட்டி உரையை துவங்கினார். அரசின் நிதிநிலை மோசமானநிலையில் உள்ள நிலையில் அதை சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து படிப்படியாக அதை நிறைவேற்றுவோம், பொது விநியோக திட்டத்தில் மின்னனு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும், ஒரு ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணிகள் மிக கடுமையாக உள்ளது. செய்து முடிக்க இரண்டு மூன்று ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 

மத்திய அரசின் வழிமுறை மாநில அரசின் நிதியை திசைதிருப்பும் வகையில் கூட்டாட்சி முறைக்கு எதிராக உள்ளது. அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளைத் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,  1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும், பொது விநியோகத் திட்டத்தில் மின்னனு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும், அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும், 2.05 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. நிதிக்குழு மதிப்பீடு பொதுக்கணக்கு, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்த அவை கணினி மயமாக்கப்படும். 

 ஜூன் 3-இல் ஆண்டுதோறும் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் பொது நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும், கீழடி ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆய்வுப்பணிகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்டத்தின்கீழ் தமிழ் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என அறிவித்துள்ளார். தமிழக காவல்துறையை மேம்படுத்த 8, 930 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்த பிடிஆர், காவல்துறையில் உள்ள 1,33, 198 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 14,317 பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 
 

click me!