திருச்செந்தூர் விசிட் மர்மம்..! உஷாரான உளவுத்துறை..! நழுவிய எஸ்.பி. வேலுமணி..!

By Selva KathirFirst Published Aug 13, 2021, 10:19 AM IST
Highlights

களேபரத்திற்கு ஆளாக்கியிருந்த நிலையில், எவ்வித சலனமும் இல்லாமல் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது திருச்செந்தூருக்கு நேற்றே வருவதாக இருந்தது, ஆனால் ரெய்டு காரணமாக வர முடியவில்லை. தற்போது சாமியை தரிசித்துவிட்டு செல்வதாக கூறிச் சென்றார் வேலுமணி.

ரெய்டு நடைபெற்ற மறுநாளே தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்று திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு திரும்பிய வேலுமணி, இடையே மேற்கொண்ட மர்ம பயணம் உளவுத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்டு நடத்தி முடித்த மறுநாள் பிற்பகலில் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பானது. காரணம் அங்கு வந்திருந்தது எஸ்பி வேலுமணி. 60 இடங்களில் ரெய்டு நடத்தி அவர் தொடர்புடைய அனைவரையும் போலீசார் களேபரத்திற்கு ஆளாக்கியிருந்த நிலையில், எவ்வித சலனமும் இல்லாமல் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது திருச்செந்தூருக்கு நேற்றே வருவதாக இருந்தது, ஆனால் ரெய்டு காரணமாக வர முடியவில்லை. தற்போது சாமியை தரிசித்துவிட்டு செல்வதாக கூறிச் சென்றார் வேலுமணி.

வேலுமணி கூறியது போலவே திருச்செந்தூரில்  அவர் சாமி தரிசனம் செய்திருந்தார். அதுவும் குடும்பத்துடன் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டே விமான நிலையம் வந்திருந்தார். ஆனால் தூத்துக்குடிக்கு அதிகாலையில் வந்து இறங்கிய வேலுமணி வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரில் நேராக திருச்செந்தூருக்கு செல்லவில்லை. மாறாக அவரது கார் குற்றாலம் நோக்கி சென்றுள்ளது. அப்போது அவருடன் பிரபல ஒப்பந்தாரர் ஒருவரும் இருந்ததாக கூறுகிறார்கள். குற்றாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத தோப்பு போன்ற ஒரு பகுதியில் நிறுத்தப்பட்ட கார் அங்கு சுமார் அரை மணி நேரம் வரை இருந்ததாக சொல்கிறார்கள்.

பிறகு புறப்பட்ட கார் அருகே இருந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே நிற்க, காரில் இருந்த ஒப்பந்ததாரர் இறங்கிக் கொள்ள, அதிமுக பிரமுகர் சின்னதுரை என்பவர் காரில் ஏறிக் கொண்டதாக கூறுகிறார்கள். ஒப்பந்ததாரர் இறங்கிய போது அவர்கையில் சூட்கேஸ் ஒன்று இருந்ததாவும் அது தவிர சில கோப்புகளையும் அவர் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறையின் கவனத்திற்கு லேட்டாகவே வந்ததாக கூறுகிறார்கள். இதனை அடுத்து ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகளை கேட்க அங்கு சிசிடிவே கேமராவே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த விவரம் தெரிந்தே கார் அங்கு நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரில் வேலுமணியுடன் சென்ற ஒப்பந்ததாரரை உளவுத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.அத்துடன் அதிமுக பிரமுகர் சின்னதுரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் உளவுத்துறையால் கொண்ட வரப்பட்டள்ளதாக சொல்கிறார்கள். வேலுமணி குற்றாலம் சென்று என்ன செய்தார்? வேலுமணியுடன் காரில் சென்ற ஒப்பந்தாரர் கையில் வைத்திருந்த சூட்கேசில் என்ன இருந்தது என்பதை கண்டறிய உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். திருச்செந்தூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேராக அதிமுக தலைமை அலுவலகம் சென்ற வேலுமணி அங்கு எடப்பாடியிடமும் தனியாக பேசியதாக கூறுகிறார்கள். அதன் பிறகு மறுநாள் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வேலுமணி பங்கேற்கவில்லை. அதே போல் அவர் தனது வீட்டை விட்டு வெளியேவும் வரவில்லை.

click me!