Chennai Floods:பிரெட், பால் ஒருவேளைக்குக்கூட பத்தாது.. வேதனையோடு சொன்ன பெண்.. குஷ்பு சொன்ன பதில் என்னதெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 16, 2021, 8:08 PM IST
Highlights

 10 வருடமாக எம்எல்ஏவாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்தார். 10 வருடமாக இருந்தும் ஒரு தொகுதியை உங்களால் பார்க்க முடியவில்லை. எப்படி மொத்த மக்களையும் பார்த்து கொள்ள போகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தான் வேலை செய்கிறார்கள். திமுகவின் சார்பாக முதல்வர் ஸ்டாலினை தவிர யாரும் வேலை செய்யவில்லை.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் நிவாரணம் வாங்க வந்தவர்கள் பாஜகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300 பேருக்கு நிவாரண பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் பாஜக சார்பில் வழங்கப்பட்டிருந்தது. 10 மணியளவில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே அங்கு ஏராளமான பெண்கள் வந்து காத்திருந்தனர். 

ஆனால், குஷ்பு வர தாமதமான நிலையில் வெயில் அதிகரித்ததால், பொறுமையை இழந்த பெண்கள் பாஜகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் நிவாரணமே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர், முக்கால் மணி நேரம் தாமதமாக 10.45 மணியளவில் வந்த குஷ்பு நிவாரணமாக 150 மில்லி லிட்டர் பாலும், ஒரு பிரட் பாக்கெட்டையும் வழங்கினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு;- 10 வருடமாக எம்எல்ஏவாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்தார். 10 வருடமாக இருந்தும் ஒரு தொகுதியை உங்களால் பார்க்க முடியவில்லை. எப்படி மொத்த மக்களையும் பார்த்து கொள்ள போகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தான் வேலை செய்கிறார்கள். திமுகவின் சார்பாக முதல்வர் ஸ்டாலினை தவிர யாரும் வேலை செய்யவில்லை என்றார். கொளத்தூர் பகுதியில் பிரச்னை இல்லையா? தண்ணீர் தேங்கி நிற்கவில்லையா? அதிமுக காலத்தில் ஏற்பட்ட சூழல், திமுக ஆட்சியில் ஏற்படவில்லையா? திமுகதான் ஊழல் கட்சி என்று குஷ்பு காட்டமாக கூறினார்.

நடிகர் சூர்யா தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டபோது, "அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன் என்றும் பதிலளித்தார்.செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு உதவி பெற வந்த பெண்மணி 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும். தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் பிரெட் மற்றும் பால் ஒருவேளைக்குக்கூட பத்தாது என வேதனையோடு தெரிவித்தார். அதற்கு 'உறுதியாக செய்கிறோம்' என்று குஷ்பு அவரிடம் கூறினார்.

click me!