மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்... கே.எஸ்.அழகிரியை கேவலமாக விமர்சித்த குஷ்பு..!

Published : Oct 13, 2020, 12:17 PM ISTUpdated : Oct 13, 2020, 12:18 PM IST
மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்... கே.எஸ்.அழகிரியை கேவலமாக விமர்சித்த குஷ்பு..!

சுருக்கம்

காங்கிரஸில் உள்ளவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை என பாஜகவில் இணைந்த குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸில் உள்ளவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை என பாஜகவில் இணைந்த குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி நடிகை குஷ்பு பாஜவில் இணைந்தார். இதனையடுத்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புக்கு விமான நிலையத்தில் பூக்களை தூவியும், ஆளயர மாலையையும் அணிவித்து பாஜகவினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு;- 6 வருடத்திற்கு பிறகு நான் நடிகை என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? 6 வருடமாக அந்த கட்சியில் இருந்து கடினமான  உழைப்பு எல்லாத்தையும் கொடுத்தேன். சிந்திக்கும் மூளை இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் பார்த்தனர் என கே.எஸ்.அழகிரி கூறியதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும், காங்கிரஸில் உள்ளவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. தன்னை பற்றி தவறாக யார் பேசினால் பதிலடி கொடுப்பேன். எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!