தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடங்கியது.! மகிழ்ச்சியில் பயணிகள்.!

By T BalamurukanFirst Published Sep 5, 2020, 8:43 AM IST
Highlights

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

 தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.இதனை ஏற்று, கூடுதலாக, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல் -மேட்டுப்பாளையம், சென்னை-மதுரை, சென்னை -கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி , சென்னை-செங்கோட்டை ஆகிய 6 சிறப்பு ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

 இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் கவுண்டா்கள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 5 மாதங்களுக்குப் பிறகு முக்கியமான ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆன்லைன் மூலமாக ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருவதால் கடந்த முறைபோல் முன்பதிவுக்கான தளமே முடங்கியது போல் இந்த முறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

click me!