ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது.!

Published : Sep 04, 2020, 10:12 PM IST
ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது.!

சுருக்கம்

ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா?ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது. என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.  

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா..

"திருப்பதி கோவில் சொத்துகள் குறித்த தணிக்கைக்கு நீதிமன்றம் தீர்ப்பையடுத்து ஆந்திரா இந்து அறநிலையத்துறை ஒத்துகொண்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் 10லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.அறநிலையத்துறையால் கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது என ஆதாரத்துடன் கூறுகிறேன்.  கோவில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது. கடந்த 6மாதங்களில் 80கோடி மக்களுக்கு மாதம் 25கிலோ அரிசி பருப்பு மோடி அரசால் வழங்கியுள்ளோம். மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர். மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் முடிவால் தான் காவிரியில் நீர் ஓடுகிறது.மழையால் அல்ல எனவும், லடாக்கில் சீனாவோடு யுத்த சூழல் நிலவும் நிலையிலும் கூட மக்களுக்கு மோடி அரசு உதவி வருகிறது எனவும், சீன நாடு உலகத்தின் அழிவாக உருவாகியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது. என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு