வங்கி கணக்கில் பணம் பத்திரம்..!! இந்தியன் வங்கி செயலாக்க இயக்குனர் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 3:38 PM IST
Highlights

மோசடி பேர்வழிகள் யாரேனும் வங்கி கணக்கு விபரங்களை தொலைபேசியில் கேட்டால் பகிர கூடாது எனவும், உடனடியாக வங்கி கிளைகள், வாடிக்கையாளர் சேவை எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் இந்தியன் வங்கி செயலாக்க இயக்குனர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

மோசடி பேர்வழிகள் யாரேனும் வங்கி கணக்கு விபரங்களை தொலைபேசியில் கேட்டால் பகிர கூடாது எனவும், உடனடியாக வங்கி கிளைகள், வாடிக்கையாளர் சேவை எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் இந்தியன் வங்கி செயலாக்க இயக்குனர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். 

வாடிக்கையாளர் சேர்ப்பு மற்றும் செயலாக்க மையம் துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவகத்தில் நடைபெற்றது. இந்தியன் வங்கி செயல் இயக்குனர் பட்டாச்சார்யா இந்த மையத்தை துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பட்டாச்சார்யா: 

இந்தியன் கிளை வங்கிகளில் வாடிக்கையாளர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும். இந்த சேர்க்கையை வேகப்படுத்த செயலாக்க மையம் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார், எளிய முறையில் கணக்கு துவங்க இந்த அலுவலகம் செயல்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும் இந்த திட்டம். அடுத்த கட்டமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் இந்தியா முழுவதும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். வங்கிகளில் அனைத்து விதமான கடன்களும் எளிய முறையில் கிடைக்க கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள சிறு குறு தொழில்கள், வேளாண் உள்ளிட்ட கடன்களை வழங்க மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இதுவரை 5 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 இலட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர்.வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஓ.டி.பி, ஏ.டி.எம் எண்களை கேட்பதில்லை. மோசடி நபர்கள் வங்கி விவரங்களை தொலைபேசி மூலம் கேட்டால் உடனடியாக சைபர் கிரைம் அல்லது வங்கி கிளை அலுவலகங்களை அணுக வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். 
 

click me!