முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது...! காரணம் என்ன?

Asianet News Tamil  
Published : May 06, 2018, 12:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது...! காரணம் என்ன?

சுருக்கம்

bomb threatening person is arrested

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆகியோரின் வீட்டிற்கு வெடுகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள நடிகர் ரஜினியின் வீட்டிற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கும், காவல் கட்டுப்பாட்டு  அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

தமிழகத்தில் மிக முக்கிய நபர்களாக இவர்களுடைய வீட்டிற்கே  இப்படி திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் காட்டு தீ போல் பரவி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் உடனடியாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர் போலீசார். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த புவனேஷ்  என விசாரணையில் தெரியவந்தது. 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு, சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக  விசாரணை செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!