ஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்குள் திபு திபுவென நுழைந்த போலீஸ்..!

Published : Jun 13, 2021, 05:28 PM IST
ஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்குள் திபு திபுவென நுழைந்த போலீஸ்..!

சுருக்கம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு காவல்துறையினர் மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்  தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்றும் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்
நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு