நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பழிவாங்கும் நடவடிக்கையா?

Published : Sep 28, 2020, 05:17 PM IST
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பழிவாங்கும் நடவடிக்கையா?

சுருக்கம்

இந்நிலையில், அவரது அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட், மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் சூர்யா குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், அவரது அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!