எல்லோருக்கும் தடுப்பூசி பேட 80 ஆயிரம் கோடி செலவாகும்: இவ்வளவு பணம் இருக்கிறதா. பூனவல்லா கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2020, 4:34 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வாங்கி விநியோகிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேவை. இதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்,

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ரூபாய் 80,000 கோடி தேவை  எனவும் அந்த அளவிற்கு பணம் இருக்கிறதா என்றும் தடுப்பூசிகளை தயாரிக்கும் பிரபல நிறுவன தலைமை நிர்வாகி அடார் பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 3.33 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 2.46 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் 73 லட்சத்து 21 ஆயிரத்து 475 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 60 லட்சத்து 74 ஆயிரத்து 710 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றில் அமெரிக்காவையே இந்தியா பின்னுக்கு தள்ள கூடிய நிலைமை ஏற்பட உள்ளது. 

அதேநேரத்தில் இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 574 ஆக உள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தொடர் ஊரடங்கு இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டது, அதே நேரத்தில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் மருந்து ஆராய்ச்சி மூலம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அரசு கூறி வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகளை தயாரிக்கும் மற்றும் மக்களுக்காக கொரோனா தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டு வரும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- அடுத்த ஒரு வருடத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசுக்கு ரூபாய் 80 கோடி தேவை. ஏனென்றால் இதுதான் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வாங்கி விநியோகிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேவை. இதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு வழிகாட்ட வேண்டும். இருப்பினும் ப்ளூம்பெர்க் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள படி சேமிப்பு மற்றும் விநியோக தடைகள் குறித்து கவலைகள் உள்ளன. இந்தியாவுக்கு வெகுஜன நோய் தடுப்புக்கான அனுபவம் மற்றும் உட்கட்டமைப்பு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
 

click me!