கொட்டும் மழையில் சடலங்கள்.. கொரோனா பரவும் ஆபத்து.. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 12:15 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் சடலங்கள் மூலம் மற்றவர்களுக்கு அது பரவும் அளவுக்கு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி  நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மழையில் நனைந்தபடியே பிணவறை முன்பு  காத்திருக்கும் அவலம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியமான இச்செயல்பாடுகளால் கொரோனா எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். 

இதனால், மருத்துவ கல்லூரி பிணவறையில் சடலங்கள் குவிந்து வருகின்றன. ஒவ்வொரு நோயாளியும் உயிரிழந்தால் அவர்களது சடலங்களை கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரத்தியேகமாக உறையில் பார்சல் செய்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. சடலங்களை ஸ்ட்ரக்சர்களில் வார்டுகளிலிருந்து  எடுத்து வந்து பிணவறையில் வைத்து பிரத்யேக பார்சல் செய்வதற்காக போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் சடலங்களை பெறுவதற்காக உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாபகரமான நிலை உள்ளது. இதற்கிடையே குருசடி பகுதியை சேர்ந்தசெல்வராஜ் என்பவரது சடலம் மாயமான சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரபபை ஏற்படுத்தியது. வார்டுகளிலிருந்து அப்புறப்படுத்தும் சடலங்கள் மழையில் நனைந்தபடியே ஸ்ட்ரக்சரில் கொண்டுவரப்பட்டு பிணவறைக்கு முன்பு மழையிலேயே காத்திருக்கும் அவலம், பரிதாப நிலையும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மூலம் மற்றவர்களுக்கு அது பரவும் அளவுக்கு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி  நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழையில் நனைந்தபடி பிணவறை முன்பு வைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒளிப்பதிவு செய்ய சென்ற செய்தியாளர்களை அங்குள்ள ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். மருத்துவ கல்லூரி நிர்வாகமும் மருத்துவமனை ஊழியர்களும் அஜாக்கிரதையாக செயல்படுவதை சரி செய்வதற்கு பதிலாக அவற்றை அம்பலப்படுத்தப் முயற்சிக்கும் செய்தியாளர்கள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலையில் சடங்கு சடலங்களை கைப்பற்ற வரும் உறவினர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

click me!