அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு... பாஜகவுக்கும், பாமகவும் எத்தனை தொகுதிகள் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2021, 12:11 PM IST
Highlights

பாமகவும் இன்று கூட்டணி முடிவினை அறிவித்துவிட்டு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார்.
 

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே இருக்கிறது. இன்னும் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து முடிவுக்கு வரவில்லை. வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் அதிமுக தொகுதிப்பங்கீட்டில் அசுர வேகத்தில் களமிறங்கிவிட்டது. சென்னையில் இன்று முதல்வர் இல்லத்தில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் உள்ளிட்ட பாஜக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பாஜகவுக்கு 22 இடங்கள் ஒதுக்குவது என்று முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. அதே மாதிரி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசு அறிவித்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக கறார் காட்டி வந்த நிலையில், கல்வி- வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பாமகவும் இன்று கூட்டணி முடிவினை அறிவித்துவிட்டு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார்.

பாமகவை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே நடந்த இரண்டுகட்ட பேச்சுவார்த்தையின்போது 23 இடங்கள் என்று முடிவாகிவிட்டதாக தெரிகிறது. வன்னியர்களுக்கான இடது ஒதுக்கீட்டு விவகாரத்தில்தான் பாமகவுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்திருக்கிறது. எத்தனை இடங்கள் என்று முன்னரே இறுதி செய்துள்ளபடி தொகுதி பங்கீட்டினை விரைந்து முடிக்கவும் தயாராக இருக்கிறது பாமக என்றே தகவல். தற்போதைய நிலவரப்படி 23 சீட்டு 250 ஸ்வீட்டு என்பது தான் களநிலவரம்.

click me!