எமோஷ்னல் சென்டிமென்ட்... ஸ்ரீபெரும்புதூர் காங்கிரசுக்குத்தான்.... போட்டியிடும் வேட்பாளர் யார்?

By Asianet TamilFirst Published Feb 27, 2021, 11:52 AM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம் என்பதால் அந்த இடத்தின் மீது ஒரு எமோஷ்னல் கனெக்ட் காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு எப்போதும் உண்டு. ஆகையால், இந்த தொகுதியை திமுகவில் காங்கிரஸ் அடம் பிடித்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம் என்பதால் அந்த இடத்தின் மீது ஒரு எமோஷ்னல் கனெக்ட் காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு எப்போதும் உண்டு. ஆகையால், இந்த தொகுதியை திமுகவில் காங்கிரஸ் அடம் பிடித்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் இந்த முறை எப்படியும் கணிசமான தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என மல்லுகட்டிக் கொண்டிருக்கிறது. என்னதான் முயற்சி செய்தாலும் போன முறை கிடைத்த 41 தொகுதிகளை எட்டிப் பிடிக்க முடியாது என்ற நிலையில், முக்கியமான சில தொகுதிகளையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. 

இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. காரணம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம் என்பதால் அந்த இடத்தின் மீது ஒரு எமோஷ்னல் கனெக்ட் காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு எப்போதும் உண்டு. எனவே இங்கு நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுலும், பிரியங்காவும் களமிறங்கி தொகுதிக்குள் வலம் வருவார்கள் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன. எனவே எப்படியாவது இந்த தொகுதியின் வேட்பாளராகிவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள் பலரும் விரும்புகின்றனர். 

ஆனால் இது தனித்தொகுதி என்பதால் பலருக்கு ஆசை இருந்தும் போட்டிக்கு நிற்க முடியவில்லை. போட்டியிட விரும்புவோர் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் செல்வப் பெருந்தகை. விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளில் இருந்துவிட்டு காங்கிரசுக்கு வந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். எனவே மீண்டும் சீட் கேட்கிறார். அறிமுகம் தேவை இல்லாத அளவுக்கு தொகுதிக்குள் பிரபலம் என்பது கூடுதல் பலம். இதுவே பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள், உள்ளூரில் செல்வாக்காக உள்ள பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோருடன் இருந்த முட்டல்மோதல் காரணமாகவே கடந்த முறை அவர் வெற்றி வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சீட் கொடுத்தால் இந்த முறையும் உள்ளடி வேலைகள் அவரை கவிழ்த்துவிட்டால் அதிமுக எளிதாக வென்று விடும் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.


 
ரேசில் அடுத்த இடத்தில் இருப்பவர் விக்டரி ஜெயக்குமார். தொழிலதிபரான இவர் டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கம் என்கிறார்கள். அந்த ரூட்டில் சீட் வாங்க முயற்சித்து வருகிறாராம். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுயில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு புதுமுகம். பணம் இருக்கிறது, குற்றப் பின்னணி இல்லை என்பதால் இவருக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என காங்கிரஸில் ஒரு குரூப் கம்பு சுற்றுகிறதாம். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர் என்பதால் கட்சிக்குள் தனி செல்வாக்கு இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் இருக்கிறார் முன்னாள் எம்பி விஸ்வநாதன். மேலே உள்ள இரண்டு பேரை தாண்டி இவரால் சீட் வாங்கிவிட முடியுமா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் தொகுதி நமக்குத்தான், ஆனா வேட்பாளர்தான் யார்னு தெரியலை என நகம் கடிக்கிறார்கள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கதர்சட்டைக்காரர்கள்.

click me!