பாஜக-அதிமுக தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை தொடங்கியது.. ஜெட் வேகத்தில் எடப்பாடியார்.. ஆட்டம் அரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2021, 11:44 AM IST
Highlights

இதற்காக பாஜகவின் தேர்தல்  பொறுப்பாளர் கிஷன் ரெட்டி,  சி.டி ரவி,  தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில்  அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாஜக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இது அதிமுக பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள. எப்போது தமிழக சட்டமன்ற தேர்தல் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமாக இருப்பதால், அரசியல்  கட்சிகள் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டுகின்றன. 

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே, அதிமுக மாநிலத் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த தேர்தலில் அமைந்த அதே கூட்டணி கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ள அதிமுக, அக்கட்சிகளுடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே  பாஜக, பாமக உடனான கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில்,  அக்காட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. 

இதற்காக பாஜகவின் தேர்தல்  பொறுப்பாளர் கிஷன் ரெட்டி,  சி.டி ரவி,  தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில்  அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு அரை மணி நேரம்  நீடித்தது.  தொடர்ந்து அக்குழுவினர் துணை முதல்வரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதிமுக- பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது அவ்விரு கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி, கூட்டணியிர் இருந்து விலகி பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!